தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டினப்பாக்கம் லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - fisherman

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

லூப் சாலையை ஆக்கிரமித்த மீன்கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
லூப் சாலையை ஆக்கிரமித்த மீன்கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

By

Published : Apr 10, 2023, 7:56 PM IST

சென்னை: சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையில் அப்பகுடியின் போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும் மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பட்டினப்பாக்க பகுதி மக்கள் நீதிமன்றத்தின் சற்றும் எதிர்பாராத அப்புறப்படுத்தும் வழக்கிற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டால் அம்மக்களளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்களின் தொழில் மந்தமடையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இம்மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த தீர்ப்பை கைவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கை நாளை (ஏப்ரல் 11) விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details