சென்னை:மாநிலம் முழுதும் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (டிச.1) விசாரணைக்கு வந்தது.
சென்னை அருகே உள்ள சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் மாவட்டம் வடவம்பாலம் பாசன கால்வாய், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி. மாத்தூர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
தண்ணீர் மிகவும் அவசியமானது
அப்போது, நீதிபதிகள், "தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்குச் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுக் கண்காணிப்போம்" என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரசு தரப்பில், "ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.