நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பொறியியல் பிரிவு, மீன்வள அறிவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்தும், நேர்காணலுக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை எனக் கூறி, சேலத்தைச் சேர்ந்த கார்த்தி, யுவராஜ், சோனியா உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
மீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத்தடை - Madras high court orders Interim Stay on fisheries university interview results
சென்னை: நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்காணலில் இடம்பெறுபவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை நிர்ணயிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பல்கலைக்கழகம் தேவைக்கேற்ப விதிகளை மாற்றியமைத்துள்ளதாகவும் வரும் 12ஆம் (நாளை) நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தண்டபாணி, வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை, உதவி பேராசிரியர் நேர்முகத்தேர்வு தொடர்பான முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.