தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை! - ஆலம்பனா

Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் மற்றும் நடிகர் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா ஆகிய திரைப்படங்களை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 6:50 AM IST

சென்னை:நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்ததுள்ளது. இந்த கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தி உள்ளது.

இதனால், மீதத் தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும், அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித் தருவதாக 2021-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நடிகர் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தை டிசம்பர் 15ஆம் தேதியும், அயலான் படத்தை 2024 ஜனவரி 14ஆம் தேதியும் வெளியிட உள்ளதால், இரு படங்களையும் வெளியிட தடை விதிக்கக் கோரி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி!

ABOUT THE AUTHOR

...view details