தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிலளிக்க ஓபிஎஸூக்கு அனுமதி - Chennai news

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிலளிக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி!
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிலளிக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி!

By

Published : Mar 13, 2023, 6:48 PM IST

சென்னை: கடந்த 2022 ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, இன்று (மார்ச் 13) நீதிபதி குமரேஷ் பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டது” என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில்தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய தங்கள் தரப்புக்கு அவகாசம் அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அடுத்த விக்கெட் அவுட்.. ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!

ABOUT THE AUTHOR

...view details