தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு - துக்ளக் குருமூர்த்தி எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற உத்தரவு

குருமூர்த்தி மனுவுக்குப் பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ். துரைசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைப் பிப்ரவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.

துக்ளக் குருமூர்த்தி எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
துக்ளக் குருமூர்த்தி எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Feb 10, 2022, 4:40 PM IST

சென்னை: 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51ஆவது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையோ பிடித்துத்தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்துவிட்டார்.

துக்ளக் குருமூர்த்தி

இதனிடையே, ஆட்சி மாற்றத்துக்கு, முந்தைய உத்தரவை ரத்துசெய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, புதிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கைவைத்தார்.

துக்ளக் குருமூர்த்தி

தமிழ்நாட்டிற்குள் இந்தி வரப்போகிறது - ஆடிட்டர் குருமூர்த்தி

இதையடுத்து முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மீண்டும் விசாரணை நடைமுறையைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி மறுத்த உத்தரவைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

ஆடிட்டர் குருமூர்த்தி என்ன உத்தமபுத்திரனா ? - கொதித்தெழும் புகழேந்தி!

இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (பிப்ரவரி 10) விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்தி தரப்பில், ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட விண்ணப்பம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், துரைசாமி திமுகவுக்கு ஆதரவானவர் என்பதால் முந்தைய தலைமை வழக்கறிஞரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

துக்ளக் குருமூர்த்தி

இதையடுத்து குருமூர்த்தி மனுவுக்குப் பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ். துரைசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைப் பிப்ரவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கமலாலய பெட்ரோல் குண்டுவீச்சில் கூட்டுச்சதி - ரவுடியின் பின்னணியில் யார்? தேவை என்ஐஏ விசாரணை!'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details