சென்னை:கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்களில் உள்ள எண்ணெயின் அளவில் குறைபாடு இருப்பதாக யூடியூப் தளத்தில் அக்ஷய் என்பவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 3 லட்சத்து 35 ஆயிரம் பின் தொடர்பாளர்களை வைத்துள்ள யூடியூபரால் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோல்டு வின்னர் எண்ணெய்யை தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்து, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று (அக்.02) விசாரணைக்கு வந்தது. விசாரணையில், காளீஸ்வரி நிறுவனத்தின் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கடந்த 30 ஆண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எண்ணெய்களை தயாரித்து வருவதாகவும், முறைகேடான வணிக நடைமுறையை கையாளவில்லை என்பதால், தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிவகாசி வழித்தடத்தில் பாதுகாப்பு பணிகள்.. இரண்டு நாட்களுக்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு