தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் சிறுவர்களும் அர்ச்சகர்; தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு - நீதிமன்றம் அதிரடி! - Chennai High Court News

Archagar Qualification: தமிழ்நாடு கோயில்களில் சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அர்ச்சகர் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு - நீதிமன்றம் அதிரடி!
madras-high-court-order-committee-form-and-research-qualification-and-age-of-archagar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:32 PM IST

சென்னை: தமிழ்நாடு கோயில்களில் சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமனறத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாகப்பட்டினம் பகுதியலுள்ள பெருமாள் கோயிலின் செயல் அதிகாரியால் மரபுகள் மீறப்படுகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலில் பாலாலயம் நடத்த இருப்பதாக செயல் அலுவலர் அறிவித்திருக்கிறார். எந்த திருப்பணிக்குழுவும் அமைக்கப்படாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் திருப்பணிக்காக வசூலிக்கப்படும் நன்கொடை பணம் எங்கிருந்து வந்தது என்ற புள்ளி விவரங்களும் இல்லை என தெரிவத்தார்.

இதையும் படிங்க:திருநெல்வேலி, பாளையம் கால்வாய்களில் கழிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

இதனையடுத்து நீதிபதிகள், திருப்பணிக்குழு அமைக்காமல் எப்படி பாலாலயம் நடத்தப்படுகிறது? திருப்பணிக்கு நன்கொடையாக வரும் பணம் தணிக்கை செய்யப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கூறும் போது, அர்ச்சகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பாலாலயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? நன்கொடை தணிக்கை செய்யப்படுகிறதா? என்பது குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் எனவும், சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். மேலும், கோயில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதன குழு உள்ளிட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தல் வழக்கு: திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

ABOUT THE AUTHOR

...view details