சென்னை:ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சிம்பு நடிப்பில் ’சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, 2.40 கோடி ரூபாயை பெற்ற இயக்குநர் கௌதம் மேனன் படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கை வந்த போது, படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என கௌதம் மேனன் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்படி படத்தை முடித்து தராத கௌதம் மேனன், 2 கோடி ரூபாய் பணத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்க தவறினால் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ள நிலையில், படக்குழு முன்பதிவு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் நாளை படம் வெளியீடு என போஸ்டர் வெளியிட்டுள்ளது ரசிர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!