தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரான வழக்கு; இன்று முதல் வழக்காக விசாரணை! - மு க ஸ்டாலின்

TN Bus Strike: தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழக வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை, இன்று (ஜனவரி 10) காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TN Bus Strike
போக்குவரத்து கழக வேலை நிறுத்த போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:30 AM IST

சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜன.9) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்களின் நடமாட்டத்துக்கும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நேற்று காலை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்க தலைமை நீதிபதிகள், மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிவடையும் பட்சத்தில், பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால், மாலை 4.45 மணி வரை மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிவடையாததால், அவசரம் கருதி, வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் மாலை மீண்டும் முறையிடப்பட்டது.

இதையடுத்து, இன்று (ஜனவரி 10) காலை, முதல் வழக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details