தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய டாஸ்மாக் கடை திறக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை பெரியமேடு குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Mar 8, 2023, 2:09 PM IST

சென்னை: பெரியமேட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைச் செயலக ஊழியரான மனோகர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரி மற்றும் மத வழிபாடு தளங்களும் அமைந்துள்ள நிலையில், அப்பகுதியில் புதிதாக மதுபானக் கடையை அமைக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளது.

இந்தக் கடை செயல்பட தொடங்கினால் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனு கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே புதிதாக கடையை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுபானக் கடை அமைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "ஐஐடிக்கு செல்ல விரும்பினால் நாட்டை காப்பது யார்?" - ராணுவ பயிற்சி இளம்பெண் சோனியா!

ABOUT THE AUTHOR

...view details