சென்னை: கடந்த 1998 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற போது, தாயின் வயிற்றில் ஏழரை மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன், மேஜரான பின், 2017 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால், பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்து விட்டதால் பிரணவும் இந்திய குடியுரிமை துறந்து விட்டார் என்பதால், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.