தமிழ்நாடு

tamil nadu

பக்கத்து வீட்டு தென்னை மரத்தால் தொல்லை என வழக்கு.. தென்னைக்கு பதில் கொய்யா மரம் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Feb 22, 2023, 8:27 PM IST

பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் தென்னை மரம் இடையூறாக இருப்பதால் அதை வெட்ட உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு மாற்றாக கொய்யா மரத்தை நட மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

Madras High Court has ordered to cut down the coconut tree and replace it with guava tree
தென்னைக்கு பதில் கொய்யா மரம் வைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி அண்டை வீட்டில் தென்னை மரம் வளர்க்கப்படுவதாகவும், அதிலிருந்து தேங்காய் விழுவதால் தமது வீட்டின் மேற்கூரை சேதமடைவதாகக் கூறியுள்ளார்.

அடிக்கடி மேற்கூரை சேதமடைவதால் தமக்கு மன உளைச்சல் ஏற்படுவதால், தென்னை மரத்தை அகற்றக்கோரி அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி, தென்னை மரத்தை அகற்றக் கடந்தாண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் வருவாய் அதிகாரி உத்தரவுப்படி தென்னை மரம் அகற்றப்படவில்லை என்பதால் மரத்தை அகற்ற டி.ஸ்பி-க்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்கும்படி தென்னை மரம் வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான கலியமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய போதும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தென்னை மரத்தை வெட்டி அகற்றுமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். தமது சொத்தை பாதுகாக்க மனுதாரருக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, வெட்டப்படும் தென்னை மரத்திற்குப் பதிலாகக் கொய்யா மரம் வைக்க வேண்டுமெனவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குடியரசு துணைத் தலைவர் தமிழ்நாடு வருகை: தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details