சென்னை :திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சிக் கடைகளில், 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.9) விசாரணைக்கு வந்தது.
’அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும்’ - உயர் நீதிமன்றம் - அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கடைகளை ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் அகற்ற நடவடிக்கை எடுக்க, திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும்