சென்னைஉயர் நீதிமன்றத்தில் அசோக் நகரைச் சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் (எ) ஊமைத்துறை என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சென்னை மயிலாப்பூரில் உள்ள அமெச்சூர் கபடி சங்கம் மாவட்ட அளவிலான கபடி வீரர்களைத் தேர்வு செய்துவருகிறது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த புகாரில் உயர் நீதிமன்றம்,2019ஆம் ஆண்டு, அனைத்து விளையாட்டு சங்கங்களும் மாநில அரசில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சங்க நிர்வாகிகள் தேர்தல் விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், 21 நாள்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிடாமலும் மார்ச் 4 ஆம் தேதி சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.