தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினை விமர்சித்தவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...

முதலமைச்சர் ஸ்டாலினை சமூக வலைத்தளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court has dismissed bail plea of person who criticized Chief Minister Stalin on social media with obscene words ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
Chennai High Court has dismissed bail plea of person who criticized Chief Minister Stalin on social media with obscene words ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

By

Published : Jun 17, 2022, 11:58 AM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்து பரப்பியதாக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று (ஜூன்.16)விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இந்நிலையில் செந்தில்குமார் தரப்பில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடுக - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details