தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா? - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Feb 4, 2021, 8:26 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை 10 நாள்களுக்குப் பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாள்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (பிப்.03) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் இரு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், உடற்கூராய்வு முடிந்த 10 நாள்களுக்குப் பிறகு காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் சடலங்கள் புதைக்கப்படுவதாகவும், சில சடலங்கள் கல்வி பயன்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல்களை தகனம் செய்வது என்பது மதம் சம்பந்தப்பட்ட விடயம் எனத் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சடலங்கள் புதைக்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து, கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'பிப்.8ஆம் தேதி முதல் வழக்குகளின் நேரடி விசாரணை தொடங்கும்' - தலைமை பதிவாளர்!

ABOUT THE AUTHOR

...view details