தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குழந்தைகளின் கல்விக்கு பணம் ஏற்பாடு செய்ய, ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு" - சென்னை உயர் நீதிமன்றம்! - Update High Court News in tamil

Madras High Court grants special leave for life accused: கடலூரைச் சேர்ந்த செந்தில்குமாருக்குத் தமிழீழ விடுதலை போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக கியூ பிரிவு காவல் துறையினரால் தடா சட்டத்தில் 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பிள்ளைகளின் படிப்பு செலவிற்குப் பணம் திரட்டுவதற்காகச் சிறப்பு விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras-high-court-grants-special-leave-for-life-accused-to-raise-funds-for-childrens-education
பிள்ளைகள் படிப்பிற்குப் பணம் ஏற்பாடு செய்ய, ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 9:48 PM IST

சென்னை:குழந்தைளின் படிப்பு செலவிற்குப் பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்குச் சிறப்பு விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக கியூ பிரிவு காவல் துறையினரால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 2012ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தங்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் முதல் இரண்டு பிள்ளைகள் மருத்துவம் படித்து வருவதாகவும், மற்ற இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் சிறையில் உள்ள நிலையில் பிள்ளைகளின் படிப்பிற்காகப் பணம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், பணம் திரட்டுவதற்கு ஏதுவாக கணவரை விடுப்பில் அனுப்ப உத்தரவிட வேண்டும்." எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியாவும், சிறை நிர்வாகம் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதிகள், செந்தில்குமாருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை காலை நேரத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details