கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். நியமனம் செய்யும்போது, தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.