தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை.. நளினி, ரவிச்சந்திரனுக்கு கிடைக்காமல் போனது ஏன் ? - தீர்ப்பின் முழு விவரம்..! - நளினி தீர்ப்பின் முழு விவரம்

நளினியை விடுதலை செய்யக்கோரி ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரம் போல, விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் கிடைத்த விடுதலை.. நளினி, ரவிச்சந்திரன் கிடைக்காமல் போனது யான்
பேரறிவாளன் கிடைத்த விடுதலை.. நளினி, ரவிச்சந்திரன் கிடைக்காமல் போனது யான்

By

Published : Jun 17, 2022, 3:33 PM IST

சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு

அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் காலம் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்தார்.

விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, விடுவிக்கப்படாத ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருதி விடுவிக்க வேண்டுமென நளினி வாதிட்டார். அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம்.

இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். தாமாக விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிடத் தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் நளினி தெரிவித்தார்.

விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இதேபோல ரவிச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாமிதுரை, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு முடிவெடுத்தாலும் இதுவரை சிறைவாசம் அனுபவிப்பதாகவும், அரசின் முடிவை அமல்படுத்தும் வகையில் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டுமெனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதாகவும், 7 பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாகக் கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் வாதிட்டார்.

பேரறிவாளன் மட்டுமல்லாமல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநரிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளில் இன்று (ஜூன்.17) தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் இல்லமால் விடுதலை செய்ய கோரிய நளினி மற்றும் ரவிச்சந்திரன் மனுக்களைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.

நளினியை விடுதலை செய்யக்கோரி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரம் போல, விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details