தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court directed the DGP to file an inquiry report in the Finance company cheating case
நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

By

Published : Mar 18, 2023, 9:30 AM IST

சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்துள்ள வழக்கில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை என்பதாலும், தனியார் வங்கிகளும் உடந்தையாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்களின் கருப்பு பணத்தை முதலீடு செய்கின்றனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒருசில மாதங்களுக்கு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தை கொடுக்கும் நிறுவனங்கள் பின்னர் நஷ்ட கணக்கை காண்பித்து, நிறுவனங்களை மூடிவிட்டு வெளி நாட்டிற்கு தப்பித்துவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு, தங்களது பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், முதலீட்டாளர்களிடம் தங்களது பணத்தை இழந்தது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வழக்குகள் விசாரிக்கபட வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும், மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details