சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
பட்டியல் வழக்குகள் விசாரணை: 4ஆவது நாளாக அமர்விற்கு வராத தஹில் ரமாணி - Tahil Ramani news
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள நிலையில், இன்று நான்காவது நாளாக அவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
![பட்டியல் வழக்குகள் விசாரணை: 4ஆவது நாளாக அமர்விற்கு வராத தஹில் ரமாணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4413050-thumbnail-3x2-thahil.jpg)
madras high court chief justice tahil ramani not sitting today
இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமாணி, கடந்த 9ஆம் தேதியிலிருந்து, நான்காவது நாளாக இன்றும்அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
அவருக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய வழக்குகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வின் மூத்த நீதிபதிகள் முன் பட்டியலிடப்படுவதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.