தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.கே.சுரேஷ் மீதான லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு..!

RK Suresh Look Out Notice: ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RK Suresh Look Out Notice
ஆர்.கே.சுரேஷ் மீதான லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 8:26 PM IST

சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறி, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூபாய் 2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாகவும், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்பிருப்பதாகவும் கூறி, திரைத்துறையைச் சேர்ந்த மாநில பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது.

அதன்படி ஆஜராகாததால், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ஆரூத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும் மனைவி மற்றும் குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகத் துபாயில் இருப்பதாகவும், நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அதனால், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனக்குப் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீசை ரத்து வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த முறை, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்ததுடன், சென்னையில் திரும்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, டிசம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (டிச 18) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஆர்.கே.சுரேசுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் புதிதாகச் சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details