தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்

Madras High Court: பாமகவின் கொள்கை குறித்து பிரச்சாரம் செய்ய ராணிப்பேட்டை காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 3:48 PM IST

ராணிப்பேட்டை: பாமகவின் கொள்கை குறித்து பிரச்சாரம் செய்ய “மோட்டார் சைக்கிள் பேரணி” நடத்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளும்கட்சியினருக்கு மட்டும்தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா? யாருக்காக காவல் துறையினர் உள்ளனர்? பொதுமக்களுக்காகவா, ஆளும் கட்சியினருக்காகவா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், மத்திய அரசின் ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின், ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

ஒரு வேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க முடிவு!

ABOUT THE AUTHOR

...view details