தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஒத்திவைப்பு! - Enforcement Directorate

Minister Senthil Balaji Bail case: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் வழக்கை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

madras high court Adjourn minister senthil balaji bail case on a week
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 4:43 PM IST

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் ஜாமீன் மனு மட்டுமல்லாமல், செய்தில் பாலாஜியின் முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.

இதன்படி அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்று நீதிபதி வழக்கை இன்று (அக். 11) விசாரித்தார். அப்போது, அமலாக்கத்திறை சார்பில், விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், செந்தில் பாலாஜி தரப்பில் மருத்துவ காரணங்களை முன்னிட்டு நாளை வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமலாக்கத்துறை வாதத்தை ஏற்று, செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: இஸ்லாமியக் கைதிகளை விடுதலை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details