தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சுந்தர் மோகன், குமரேஷ் பாபுவுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்ததுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்..
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்..

By

Published : Jun 6, 2022, 1:23 PM IST

சென்னைஉயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.

அதன் படி, முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் இப்போது, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, இரு புதிய நீதிபதிகளும், இன்று (ஜூன் 6) பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதன் பின், புதிய நீதிபதிகளை, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர். அப்போது அவர்கள், புதிய நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

இறுதியில், நீதிபதி சுந்தர் மோகன் அளித்த ஏற்புரையில், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் ஜூனியராக பணியாற்றிய போது, குற்ற வழக்குகளைக் கையாள்வது குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தொழில் முறையில் தனக்கு உதவியாக இருந்த தனது மூத்த வழக்கறிஞர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

நீதிபதி குமரேஷ் பாபு தனது ஏற்புரையில், வழக்காடும் முறையை கற்றுக் கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும், மூத்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.

புதிய நீதிபதிகள் வாழ்க்கை வரலாறு: நீதிபதி சுந்தர் மோகன் - 1969ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சுந்தர் - சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1991ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி கே.குமரேஷ் பாபு -சென்னையைச் சேர்ந்த இவரது தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதல் பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சட்டம் முடித்து 1993ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் 2001 முதல் 2002ம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும் 2020 முதல் 2021 வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கணவன், மனைவி நீதிபதிகளாக நியமனம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details