சென்னை: கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலூரை சேர்ந்த தாமோதரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் அனைத்தும் தன்னுடையது எனவும்; தொழிலதிபர் என்ற முறையில் தமக்கு தேவைப்படும் நிலையில் பணத்தை தமது மைத்துனரான தாமோதரனிடம் கொடுத்து வைத்திருந்ததாக ஸ்ரீனிவாசன் என்பவர் கூறினார்.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த விசாரணையில், ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாமல் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, புதிய 200 ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டது தெரியவந்தது. வங்கி கிளையில் அல்லாமல் வங்கியில் உள்ள பணப்பெட்டகம் (Currency chest) மூலம் ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டது தெரியவந்தது.
இதற்கு வங்கி அதிகாரிகள் துணைபோனதாக அவர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி வேலூர் கனரா வங்கியின் அப்போதைய மூத்த மேலாளர் தயாநிதி மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க:திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி? - புதிய இணையதளம் தொடக்கம்!