தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.பி.அன்பழகன் மீதான குற்றவழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றமால் போராட்டம் நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 27, 2023, 9:28 PM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் புள்ளி விவரங்களை அரசு முறையாக வெளியிடவில்லை என குற்றம்சாட்டி, திமுக அரசிற்கு எதிராக கடந்த 2021ம் ஆண்டு தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் போராட்டம் நடத்தியதாகக் கூறி வெள்ளங்கொண்டபாளையம் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கே.பி.அன்பழகன் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் நோய்த்தொற்றைப் பரப்புதல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் தர்மபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை இயக்குனரின் பணி நீட்டிப்பு... செப்.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கே.பி.அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, வழக்கில் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திருமங்கலம் காவல் ஆய்வாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details