தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மன உளைச்சல் காரணமாக ஒருவர் தற்கொலை! - கரோனா மன உளைச்சல்

சென்னை : போதிய வருமானம் இல்லாததாலும் கரோனா தொற்று பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான 55 வயது நபர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மன உளைச்சலில் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை
மன உளைச்சலில் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை

By

Published : Jun 11, 2020, 7:37 PM IST

Updated : Jun 11, 2020, 7:46 PM IST

சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா (வயது 55). இவர் சொந்தமாக சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் கணினி பழுதுபார்க்கும் கடை ஒன்றை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருப்பதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா தொற்று சென்னையில் வேகமாகப் பரவி வருவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோம் எனும் அச்சத்தில் கடந்த சில நாட்களாக, இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பரேஷ் அஜ்மீரா


இந்நிலையில், இன்று மதியம் திடீரென தனது கடை இருக்கும் கட்டடத்தின் இரண்டாவது தளத்திற்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்த பரேஷ் அஜ்மீரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மன உளைச்சலில் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரேஷ் அஜ்மீரா

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யானைகவுனி காவல் துறையினர், பரேஷின் உடலைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு பர்வேஷ் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுவனை கடித்துக் குதறும் வெறிநாய் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

Last Updated : Jun 11, 2020, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details