சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமும், நாட்டின் நான்காவது பெரிய நகரமுமான சென்னை, இந்தாண்டு தனது 382ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது.
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம், தற்போது அனைத்து நாட்டவரும் அறியும் சென்னை மாநகரமாக இருக்கிறது.
ஏன் கொண்டாட வேண்டும்
இந்த மாநகரத்தின் வளர்ச்சியை கொண்டாடும் விதமாக வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'மெட்ராஸ்' தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல நிகழ்ச்சிகள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த வருடமும் 382ஆவது தினத்தை கொண்டாட சென்னைவாசிகளுக்கு பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 'சென்னை 2000 பிளஸ் டிரஸ்ட்', என்ற குழு, இந்த மெட்ராஸ் தினத்தை ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இது தான் சென்னை
மேலும் பல ஆண்டுகளாக நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளையர்களை நினைவு கொள்ளவா இந்தத் தினத்தை கொண்டாட வேண்டும் என விமர்சித்துள்ளது. இதையடுத்து,சென்னையின் வயது 2000-த்தை கடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வரலாற்றுப்படி, 1631ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸிஸ் டே என்பவர் சோழமண்டலக் கடற்கரை ஓரமாக ஒரு சிறிய இடத்தை வாங்கினார். கடல்சார் வணிகத்திற்காக அந்த இடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். கோட்டையைச் சுற்றி படிப்படியாக விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம் என்று கூறப்படுகிறது.
பிரான்சிஸிஸ் டே வாங்கிய நிலத்தில் மீனவர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்தன. அந்தக் கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் மதராசன் என்ற ஒருவர். அந்த தலையாரின் மற்றொரு நிலத்தை பிரான்சிஸிஸ் டே வாங்க முற்பட்ட போது, தலையாரி மறுத்துள்ளார்.
பெயர் காரணம்
இதனால் பிரான்சிஸிடே தான் கட்ட உள்ள அந்த நிறுவனத்துக்கு மதராசபட்டினம் என்ற பெயரை சூட்டுவேன் என்று கூறி அந்த நிலத்தை வாங்கியதாக வரலாறு கூறுகிறது. எனவே மதராசபட்டினம் என்ற பெயர் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள்.
மெட்ராஸ் என்ற பெயர் ஆகஸ்ட் 22, 1639 ஆண்டு பிறந்தது என்று சொல்வது வழக்கம். அதாவது அப்போது ஆண்ட வெள்ளையர்கள் காலத்தில் மெட்ராஸ், 'மதராசபட்டினம்' என்ற பெயர் இருந்தது. பின்னர் ஆங்கிலயேர்கள் அந்த பெயரை மாற்றி 'மெட்ராஸ்' என பெயர் சூட்டினர் என்று சொல்லப்படுகிறது.
மதராசபட்டினம் என்ற பெயரை எதனால் மாற்றினார்கள் என்பது ஒரு புதிராகவே இருந்த நிலையில், பிறகுதான் தெரிய வந்தது அந்த பெயரை ஆங்கிலயேர்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை, ஆகையால் மெட்ராஸ் என சுருக்கமாக மாற்றியுள்ளனர் என்பது.