சென்னை:வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாப்பட உள்ளது. இந்த நிலையில் “குப்பை இல்லா சென்னை”, (LITTER FREE CHENNAI) என்ற பெயரில் கொண்டாப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சிங்காரச் சென்னை 2.0 என்று மக்களால் அழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய நீண்ட வரலாறு கொண்டது. ஆங்கிலயேர்கள் தமிழக வளர்ச்சிக்கும், சென்னையின் வளர்ச்சிக்கும் புள்ளி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு கோணங்களில் சென்னை நவீனமயமாகி வருகிறது. 1688ஆம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் நகராட்சியாக 2ஆம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் நகராட்சி என்பது பெருமைக்குரியது. பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் நான்கு மாகாணங்களில் ஒன்றாக மதராஸ் மாறியது. அன்று முதல் ‘மதராஸ் மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது.
1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதி, இந்த நாளே நகரின் பிறந்தநாளாக கொண்டாப்பட்டு வருகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போதுதான் மெட்ராஸ், தமிழ்நாடாக மாறியது. 1969ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு மெட்ராஸ் என்கிற பெயரை மாற்றி ‘சென்னை’ என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004ஆம் ஆண்டு ‘சென்னை டே’ கொண்டாட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ‘சென்னை டே’ என்ற தினம் கொண்டாடப்படுகிறது.