தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் - நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா வழக்கு

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Apr 11, 2022, 1:02 PM IST

சென்னை:அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே. சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுகளை ஏற்று சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனுத்தாக்கல் செய்தார்.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகிரிக்க கோரி ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை ஏற்றுக் கொண்டுள்ளது. சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 11) விசாரித்த சென்னை மாவட்ட 4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி, வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறி உத்தரவிட்டார். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம்: 'எது உண்மையோ அதனை திரையிட்டு மறைக்க முடியாது' - சசிகலா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details