திருவள்ளூர்மாவட்டம் மாதவரத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், தர்மலிங்கம், அவரது மனைவி சங்குபதி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் தர்மலிங்கம் மற்றும் சங்குபதி இருவரும் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும், மாதவரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஐஃபோனை லஞ்சமாக பெற்ற குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்! - IPhone bribery
திருவள்ளூர்: ஐஃபோனை லஞ்சமாக வாங்கிய மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமாரை, கூடுதல் ஆணையர் தினகரன் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
madhavaram-police
இந்த நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் காவல் நிலையம் வந்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை செய்து வந்ததாகவும், இருதரப்பிடமும் பேசி சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதற்காக விலை உயர்ந்த ஐஃபோன் ஒன்றையும் பரிசாக பெற்றுள்ளார். இந்தத் தகவலை அறிந்த கூடுதல் ஆணையர் தினகரன், மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.