சென்னை:சென்னையின் முக்கிய பகுதியான அண்ணா சாலை எல்ஐசி எதிரிலுள்ள பேருந்து நிலைத்தின் பின்புறம், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதரஸா-இ-ஆசம் அரசு மேல்நிலைப்பள்ளி 16 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆடுகளைக் கொண்டுவந்து பள்ளி வளாகத்தில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். பின்னர் அந்த ஆடுகளை சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ஆடு மேயும் இடமாக மாறிய மதரஸா-இ-ஆசம் அரசுப் பள்ளி வளாகம் பக்ரீத் பண்டிகையன்று காலையில் ஆடுகளை பள்ளி வளாகத்திலேயே வெட்டி விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு பல்வேறு முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ரூ.1,000 கோடி மதிப்புடைய பள்ளி வளாகம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. மேலும், பழமையான பள்ளிக் கட்டடங்களை இடித்து விட்டு இங்கு போதுமான கட்டடங்களுடன் பள்ளியை பழைய நிலையில் நடத்த வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்ய நடவடிக்கை