தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.டி. ராகவன் விவகாரம் - பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம்

கே.டி. ராகவன் விவகாரத்தல் காணொலி வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக அறிக்கை
தமிழ்நாடு பாஜக அறிக்கை

By

Published : Aug 25, 2021, 2:56 PM IST

சென்னை: முன்னாள் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீது பாலியல் புகார் தொடர்பான காணொலி ஆதாரத்தை அக்கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் நேற்று (ஆக.24) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று (ஆக.25) அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக அறிக்கை

அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக காணொலி பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம்

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?

ABOUT THE AUTHOR

...view details