தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - chennai

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முதல் சுற்று முடிந்த உடன் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அகில இந்திய கலந்தாய்வுக்கு பின் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படும்
மருத்துவ அகில இந்திய கலந்தாய்வுக்கு பின் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படும்

By

Published : Oct 6, 2022, 7:12 PM IST

சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா குடியரசு நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ - எட்டினே - அபெலா ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் மால்டா நாட்டைச்சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், 'மால்டா நாட்டைச்சேர்ந்த அமைச்சர் ஜோ- எட்டினே அபேலா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திப்பின்போது இரு நாட்டு மருத்துவத்துறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மால்டா நாட்டில் மருத்துவத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. மால்டா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டபின், தமிழ்நாட்டில் உள்ள செவிலிக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'மழைக்காலங்களில் தாழ்வானப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் மழைநீர் புகாதவாறு தேவையான முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் அதே அளவில்தான் உள்ளது. பொதுமக்களுக்குத்தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 200 இடங்கள் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். இந்தாண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த உடன் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

மருத்துவ அகில இந்திய கலந்தாய்வுக்கு பின் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படும்

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற காய்ச்சல் முகாம் மூலம் 18 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மால்டா நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின் இரு நாடுகள் இடையே மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும். இங்குள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போட்டித் தேர்வுகள்... தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி...

ABOUT THE AUTHOR

...view details