தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல்; நடவடிக்கைக்கு மா.சுப்பிரமணியன் கேரண்டி - மிரட்டிய பஜக நிர்வாகி

திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து மாவட்ட மருத்துவ அலுவலரிடம் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பஜக நிர்வாகி; நடவடிக்கைக்கு மா.சுப்பிரமணியன் கேரண்டி
ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பஜக நிர்வாகி; நடவடிக்கைக்கு மா.சுப்பிரமணியன் கேரண்டி

By

Published : May 26, 2023, 7:30 PM IST

Updated : May 26, 2023, 11:11 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டகசாலையில் பணியாற்ற 43 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியும், மருந்து செய் நிலையத்தினை ஆய்வுச் செய்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டகசாலையில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த ஒராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 'இம்காப்ஸ்' தயாரித்த மருந்து ரூபாய் 55 கோடியாக இருந்தது. அதனை வரும் ஆண்டில் ரூபாய் 100 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

அதற்காக நவீனப்படுத்தப்பட்ட மருந்து செய் நிலையத்தினை ஆய்வு செய்தோம். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 43 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர் ஆந்திராவையும், 3 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மாவட்ட மருத்துவ அலுவலரிடம் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு ஆளுநா் சிதம்பரத்தில் இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது என கூறி இருந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் பெண் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தேசிய குழந்தைகள் ஆணையம் சிதம்பரம் விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வை மேற்கொண்டப்போது 2 மருத்துவர்களும் தெளிவாக கூறியுள்ளனர். அவர்கள் அரசின் விதிப்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என எங்களுக்கு நன்றாக தெரியும்.

அந்த வகையில் நாங்கள் இருவிரல் பரிசோனை செய்யவில்லை என உறுதியாக மறுத்துள்ளனர். தேசிய குழந்தைகள் ஆணையம் ஏழை எளியவர்களுக்கு நடுநிலை தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும். யாரைேயா திருப்திபடுத்துவதற்கு மருத்துவர்கள் கூறியதை மாற்றி சொல்லியுள்ளனர்.

ஆளுநர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறது. மருத்துவர்கள் விசாரணையில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என விசாரணை மேற்கொண்ட மருத்துவர்களிடம் தெரிவித்து விட்டு விசாரணை முடிந்து வெளியே வந்த பின், ஆளுநருக்கு ஆதரவான மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது. மருத்துவர்கள் அதனை செய்யவில்லை என்ற கருத்தை தெரிவித்தோம். அதனை ஒப்புக்கொண்டு சென்றப்பின்னர் மீண்டும் வெளியில் சென்று கூறியுள்ளார். இது குறித்து டெல்லி செல்லும் போது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் கருத்துகளை தெரிவிப்போம்.

ஜூன் 5ஆம் தேதி கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் பணிகள் முடிந்து குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் தேதி அறிவிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:ஹிஜாப் எதற்கு? - பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு..

Last Updated : May 26, 2023, 11:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details