சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூன் 16) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், குரோம்பேட்டை அரசு காசநோய் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரோனா தொற்றின் எண்ணிக்கை பரவலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தொற்று அதிகம் உள்ள இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல், சளிக்கான அறிகுறிகள், தொண்டை நோய் அல்லது ஏதேனும் புதிதாக உடலில் மாற்றம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெற வேண்டும்.