சென்னை மதுரவாயல் அம்மா உணவகத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மதுரவாயல் அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுக தொண்டர்கள் இருவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அம்மா உணவகத்தில் கிழிக்கப்பட்ட போஸ்டர்கள் மீண்டும் ஒட்டப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த உடன் மெரினா கடற்கரை உட்பட சென்னை முழுவதும் கருணாநிதி பெயர் கொண்ட கல்வெட்டுகளை அதிமுகவினர் அடித்து நொறுக்கினர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுக்கு 10 வருடங்களாக தீர்வு காணவில்லை, ஆனால் திமுக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக தொண்டர்கள் தவறு செய்தால் கட்சி காப்பாற்றாது திமுக தொண்டர்கள் தவறு செய்தால் அவர்களை கட்சி கப்பாற்றாது என்பதை தொண்டர்கள் உணர வேண்டும். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும், திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஜெயக்குமார் கண்டனம்!