தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2021, 2:20 PM IST

ETV Bharat / state

கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து அறிக்கை: வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல் நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

சென்னை: தமிழ்நாட்டில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு, கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகத் தாக்கல்செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குத் தொடர்ந்த எல்சா அறக்கட்டளை சார்பில், யானைகள் பிடிக்கப்படும்போது, விதிமீறல்கள் நடைபெறுவது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல ஸ்ரீரங்கம் கோயில் யானையைப் பராமரிப்பது தொடர்பாக காவிரி ஆற்றின் அருகே கோயிலுக்குச் சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படலாம் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்துவரலாம் என்றும் யோசனை கொடுக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் காணொலி பதிவை தயாரித்து, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையாக அளிக்க வேண்டும்.

அவை எப்படி பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன என்றும், கால்நடை மருத்துவரை நேரில் அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள யானைகளின் உடல் நலன் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் வனத் துறை முதன்மைப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:உயர் நீதிமன்ற 4 நீதிபதி பணியிடங்கள் - கொலிஜியம் பரிந்துரை நால்வர் யார்?

ABOUT THE AUTHOR

...view details