சென்னை:ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், அங்கு சரியாக ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.