சென்னை:ஆட்டோகிராப், ஆடுகளம் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடலை எழுதி பிரபலமானவர் சினேகன். இவர் ‘சினேகம்’ என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன், “2015ஆம் ஆண்டு முதல் ‘சினேகம் பவுண்டேஷன்’ மூலமாக பல உதவிகளை செய்து வருகிறோம். சமீபமாக இணையதளங்களில் தனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினரிடமிருந்து தகவல் வந்தது.
இது தொடர்பாக விசாரித்தபோது சமூக வலைதளப்பக்கத்தில் ‘சினேகம் பவுண்டேஷன்’ என்ற பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி என்பவர் பண வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், எனது வழக்கறிஞர் மூலமாக எனது பெயரில் போலி தொண்டு நிறுவனம் நடத்திய நபரின் விலாசத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.