சென்னை: இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் டி போர்டு அதாவது மஞ்சள் நிற பதிவெண் ப்ளேட்டுடன் விலை உயர்ந்த கார்கள் இயக்கப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் விலை உயர்ந்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களுடன் அனைத்து வகையான வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.
இது குறித்து ஏற்கனவே வாடகை வாகன சேவை நிறுவனங்களின் கோரிக்கை தற்போது நிறைவேறப்பட்டிருப்பதாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களைப் போலவே இனி தமிழகத்திலும் மஞ்சள் நிற பதிவெண் பிளேட்டுகள் கொண்ட உயர்ரக கார்கள் பயன்பாட்டில் கொண்டு வருவதைப் பார்க்க முடியும்.
இது குறித்து சுதந்திர வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜூடு மேத்யூ கூறுகையில், "போக்குவரத்துறை அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் எள் அளவிற்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குப் பயன்கள் எதுவும் இல்லை. இந்த அறிவிப்பால் அதிகளவு தேய்மானமாகி (Scrab) ஓட்டுவதற்குப் பயனில்லாத கார்களுக்கு வருடத்திற்கு 4 முதல் 5 இலட்சம் வரை கட்டணம் கட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
குறிப்பாக இந்த அறிவிப்பு என்பது சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் பெரும் முதலாளிகள் பயன் பெரும் வகையில் தான் உள்ளது. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே உற்பத்தி செய்திருந்தனர் ஆனால் இனி நிலை அப்படி இருக்கப் போவதில்லை.