டெல்லியைச் சேர்ந்த 48 வயது ஆண் ஜூன் 8ஆம் தேதி கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நோயினால் நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார்.
கரோனா பாதித்தவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை - கோவிட் 19
![கரோனா பாதித்தவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை lung](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8597777-411-8597777-1598640458045.jpg)
22:53 August 28
சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதலால் பாதிக்கப்பட்ட 48 வயது ஆணிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.
இது குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனையின் தலைவரும் இயக்குநருமான பாலகிருஷ்ணன் கூறும்போது, "கோவிட்-19 உடன் கடுமையான நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 48 வயதான ஆணிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 8ஆம் தேதி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் கடுமையாக சேதம் அடைந்தது. நுரையீரலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே செயல்பட்டுவந்தது. மேலும் அவருக்கு மூச்சுத் திணறலுடன் ஆக்சிஜன் அளவும் குறைந்தது.
இதனால் ஜூன் 20ஆம் தேதிமுதல் ஜூலை 20ஆம் தேதிவரை வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. மேலும் அவரின் நுரையீரல் வென்டிலேட்டர், எக்மோ துணையுடன் ஜூலை 25ஆம் தேதிவரை குறைந்தது ஒரு மாதம் செயல்பாட்டில் வைத்திருந்தோம்.
அவருக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். அவர் தற்போது நன்றாக உள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!