சென்னை:சூளை நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (40). இவர் சவுகார்பேட்டையில் தனது தந்தையின் துணிக் கடையில் பணியாற்றிவந்தார். சந்தீப் ஜெயின், இளைச்சி (35) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்துவந்தார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 12) மாலை மூன்று மணியளவில் சந்தீப் ஜெயின் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய மணீஷ் என்பவரை அலைபேசியில் தொடர்புகொண்டு தீக்குளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
உடனே, மணீஷ் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இளைச்சி தீயில் கருகியும், சந்தீப் ஜெயின் 60 விழுக்காடு தீக்காயத்துடனும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.