தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலி சொன்னதுபோல் வராத ஆத்திரம் - போலீஸ் பூத் மீது குண்டு வீசிய காதலன் கைது! - பெட்ரோல் குண்டு செய்முறை வீடியோ

சென்னை: யூ - டியூப்பில் வீடியோ பார்த்து காதலியைக் கொல்ல முயன்ற இளைஞர், காதலி வராததால் ஆத்திரத்தில் காவல் துறையின் சோதனைச் சாவடி மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

Teynampet police booth
தேனாம்பேட்டை போலீஸ் பூத்

By

Published : Feb 21, 2020, 7:34 AM IST

சென்னை தேனாம்பேட்டை பருவா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில், இவர் கடந்த 7 ஆண்டுகளாக உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு உஷாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த உஷா இவரைப் பிரிந்து, வேறு ஒருவனை காதலிக்கப் போவதாக வெங்கடேஷிடம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் கடந்த இரண்டு நாட்களாக வெங்கடேஷ் மற்றும் உஷாவிற்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேஷ் உஷா மீது பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். மேலும், பெட்ரோல் குண்டு செய்வதைப் பற்றி யூ டியூப்பில் வீடியோ பார்த்து கற்றுள்ளார்.

இதையடுத்து, பெட்ரோல் குண்டைத் தயார் செய்துள்ளார். உஷாவை தேனாம்பேட்டை காவல் துறையின் சோதனைச் சாவடி (போலீஸ் பூத்) அருகே பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். திட்டமிட்டபடி, வியாழக்கிழமை காலை வெங்கடேஷ் பெட்ரோல் குண்டை தனது பைக்கில் வைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உஷா வராததால் கோபமடைந்த வெங்கடேஷ் அருகிலிருந்த காவல் துறை சோதனைச் சாவடி மீது பெட்ரோல் குண்டை தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளார்.

இதனைப் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டை வீசியது யார்? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் வெங்கடேஷ் என்பவனை அவனது, வீட்டில் வைத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணை நடத்திய போது அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. பின்னர் அவனை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தேனாம்பேட்டை போலீஸ் பூத்

இதையும் படிங்க : ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா? - பிருந்தா காரத்

ABOUT THE AUTHOR

...view details