தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன- அமைச்சர் ராமச்சந்திரன் - பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்ஆர் ராமச்சந்திரன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்ஆர் ராமச்சந்திரன்

By

Published : Dec 10, 2022, 6:20 PM IST

Updated : Dec 10, 2022, 6:36 PM IST

சென்னை: எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நேற்றிரவு (டிசம்பர் 9) மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. நள்ளிரவிற்கு பின் 2:30 மணிக்குள் புயலின் மைய பகுதி கடந்து சென்றது.

பல இடங்களில் புயலின் காரணமாக மரங்கள் விழுந்துள்ளன. இதுவரை 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. உரிய நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் 205 நிவாரண மையங்களில் 9,280 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணங்கள் ஒரிரு நாளில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயலின் பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்து மழை வந்தாலும், புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பூம்புகார் துறைமுக படகுகள் சேதம் - அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

Last Updated : Dec 10, 2022, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details