தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரிகள் வேலை நிறுத்தம்: அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு - ஒரு கோடி வருவாய் இழப்பு

சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்யக்கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

lorry strike

By

Published : Sep 19, 2019, 10:54 PM IST

மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிகப்படியான கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகையை விதித்துள்ளதாக பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை, கட்டணங்களைக் குறைத்து லாரி தொழிலைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டத்துக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்திருந்தது. மாநிலம் முழுவதும் இயங்கும் 4.50 லட்சம் லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவாக சரக்கு லாரிகள் அதிகளவில் உள்ளன. அங்கும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தன. இதன் காரணமாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக படிக்க: லாரிகள் வேலை நிறுத்தம் - தேயிலை ஏற்றுமதி பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details