சென்னை, பம்மல் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தேவேந்திரன் (40). இவர் நேற்று (ஜூன்.22) வீட்டில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, வெளியே சிலர் அவரை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது .
மதுபோதை ஏற்படுத்திய விபரீதம்
இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் வெளியே சென்று பார்த்த போது, வேன் ஓட்டுநர் மோகன்ராஜ், தனது சகோதரர்கள் பிரபு, மோகலிங்கம் ஆகியோருடன் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தது தெரியவந்தது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மோகன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவேந்திரனை, சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தேவேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.