தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 லாரிகள் - ஓட்டுநர் ஒருவர் உயிரிழப்பு - மூன்று லாரிகள் விபத்து

சென்னை: மதுரவாயல் அருகே சாலையில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதிக்கொண்டதில் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

விபத்தில் சிக்கிய லாரி
விபத்தில் சிக்கிய லாரி

By

Published : Jul 2, 2020, 8:42 PM IST

சென்னை மதுரவாயல் அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் பூந்தமல்லியிலிருந்து வந்த லாரி சாலையின் வலதுபுறம் திரும்புவதற்காக நின்றுகொண்டிருந்தது. அதற்குப் பின்னால் ஜல்லி ஏற்றிவந்த லாரி நின்று கொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னீர்குப்பத்திலிருந்து தண்ணீர் ஏற்றிவந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நின்றுகொண்டிருந்த, இரண்டு லாரிகள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதிக்கொண்டதில் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய டான் போஸ்கோ (42), உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய லாரி

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், உயிரிழந்த ஓட்டுநர் உடலை உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே நேரத்தில் மூன்று லாரிகள் மோதிக்கொண்டதால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - 8 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details